தியாரூவின் இந்த 41 சிறுகதைகளும் 41 குதிரைகள்!ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேகத்தில் பயணிக்கிறது.நாம் ஏறி அமர்ந்து கொண்டால் போதும்;அது நம்மை ஏற்றிக்கொண்டு புதுப்புது உலகத்துக்குச் சென்று அரிய காட்சிகளை நமக்கு காட்டுகிறது.
கதைகளில் செயற்கையான திருப்பங்கள் இல்லை.மிக இயற்கையான ஒரு பெருவளைவில் ரயில் பெட்டிகள் அழகாய் திரும்புவது போல திரும்பிக் பயணிக்கின்றன.
இந்த நூல் வாசித்து முடித்த நிலையிலும் நினைக்கும் போதெல்லாம் ஒரு நல்ல தாக்கத்தை தரும். -இந்திரா சௌந்தர்ராஜன்