பெரிய புராணம் மூலமும் உரையும் திருமந்திரம் தொகுதி1,2,3 உரைகாணும் பேறு பெற்றவர் இவ்வுரையாசிரியர் புலவர் பி,ரா. நடராசன்
பாடல்களின் உள்ளடக்கம் |
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் |
(திருமந்திரம், பாடல் 81) |
என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். திருமூலரைச் சித்தர்களில் ஒருவர் என்று குறிப்பிடுவதுமுண்டு. திருமூலர் 3000 பாடல்களைப் பாடியுள்ளார். பெயருக்கு ஏற்றபடி, மந்திரம்போல் சுருங்கிய சொற்களில் ஆழ்ந்த பொருள் திட்பமுடைய பாடல்களும், மறைவான நுட்பமான பொருள் உடைய பாடல்களும் திருமந்திரத்தில் உள்ளன. இந்நூலில், தத்துவக் கருத்துகள் முதல் யோகநெறி, சித்தவைத்தியம் வரையான கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. |
கடவுள் தத்துவம் |
கடவுளின் சிறப்பை அறிவுறுத்துமிடத்தில், 'அன்பு சிவம் என்பவை, இரண்டு பொருள் அல்ல; அன்பே சிவம் என்பதை உணர்ந்தவர் சிலரே; அவர்களே ஞானிகள்; அவர்களே கடவுள் தன்மை பெற்றவர்' என்கிறார் திருமூலர். இதனை, |
அன்பு சிவம் இரண்டுஎன்பர் அறிவிலார் |
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் |
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் |
அன்பே சிவமாய் அமர்ந் திருந்தாரே. |
(பாடல்,257) |
சிவனின் கருணை |
தீயைவிட வெப்பம் மிகுந்தவனும், தண்ணீரைவிடக் குளிர்ச்சியானவனுமாகிய சிவன் மிகவும் கருணையுடையவன். எனினும் அவன் கருணையினை எவரும் அறிந்திலர் என்று குறிப்பிடுகின்றார். |
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் |
ஆயினும் ஈசன்அருள் அறிவார் இல்லை |
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத் |
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. |