திலக மகரிஷி
தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்பட்ட வ.உ.சி., தம் குருநாதர் லோகமான்ய பால கங்காதர திலகர் பற்றி எழுதிய நூல் இது. இலங்கை ‘வீரகேசரி’ இதழில் 1933-34இல் தொடராக வெளிவந்த நிறைவுபெறாத இவ்வாழ்க்கை வரலாறு முதன்முறையாக நூலாக்கம் பெறுகிறது. வ.உ.சி.க்கும் திலகருக்குமான உறவை இந்திய விடுதலைப் போரின் பின்னணியில் ஏராளமான புதிய செய்திகளுடன் தம் முன்னுரையில் விவரிக்கும் பதிப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, பல அரிய ஆவணங்களைப் பின்னிணைப்பில் வழங்கியுள்ளார்.