சார்லி சாப்ளினின் நகையுணார்வையொத்த ஒரு மெல்லிய சரடு அழிகிரிசாமியின் எல்லாக் கதைகளிலும் ஊடாடியிருப்பதைக்
காணமுடியும். அந்த நகைப்பின் அடியில் ஆழ்ந்த துக்கம் அல்லது சில சம்யங்களில் கோபம் மறைந்திருந்து, வாசித்து முடித்தபின்
வெளிப்பட்டு நம்மைத்தாக்கும். நுட்பமான மன உணர்வுகள், குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளின் மன உலகத்தை அவரளவுக்குத்
துல்லியமாகவும் விரிவாகவும் படம்பிடித்த இன்னொருவரைக் காண்பதரிது.