நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சுவாமி சுகபோதானந்தாவின் புதிய புத்தகம் இதோ!வாழ்க்கையைக் குறித்த மிக ஆழமான கருத்துகளை மிக எளிமையாக,அதேசமயம் எழிலுடன்,எளிய நடையில் அதேசமயன் தத்துவப்பொதிவுடன் விவரிப்பதில் அவர் வல்லவர் என்பது எல்லோரின் கருத்து.நம்பிக்கையை வளர்ப்பதற்கான யுத்திகள் தொடங்கி,தெளிவு,பக்தி மற்றும் பற்றற்ற நிலை இவைகளைப் பெறுவதற்கான தியானம் என்று பல விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் கையாளப்பட்டுள்ளது.மனம்,ஆத்மா மற்றும் அறிவு இவைகளைக் குறித்த ஞான முத்துக்களை அறிவதற்கும்,நடைமுறை வாழ்க்கையில் பிரச்சனைகளை கையாளுவது குறித்த ஆலோசனைகளைப் பெறுவதற்கும்,இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்.
நீங்கள் படித்து முடித்த பின் இதைப்பற்றி மற்றவர்களிடமும் பேசுங்கள்.அப்போழுதுதான் நம்முடைய காலத்தில் வாழும் ஒரு அசல் சிந்தனையாளரின் கருத்துக்கள் உங்களுக்குள் உருவாக்கிய உன்னத அனுபவத்தை மற்றவர்களும் உணர்ந்து கொள்ள முடியும்.