இதில் ஏழு ஈரானிய திரைக்கதைகள் இடம் பெற்றிருக்கிறது. ஈரானிய நியூவேவ் சினிமாவின் சாரமாக இதை சொல்லலாம். குழந்தைமையின் எளிமை, காதலின் உச்சம், குடும்ப உறவின் நுட்பமான சிடுக்கு குறித்த பார்வை, பெண் சுதந்திரத்திற்கான சமூக,பொருளாதார,அரசியல் சார்ந்த ஆக்கப்பூர்வ முன்னெடுப்பு என இதில் இடம் பெற்றிருக்கும் கதைகள் ஈரான் தேசத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவை துல்லியமாய் பதிவு செய்திருக்கிறது.