வாழ்க்கை அனுபவங்களின் இருப்பிடம் படைப்பாளி அந்த இருப்பிடத்தை தனக்குள் வைத்திருக்கமாட்டான். அந்தப் படைப்பாளி ஒரு
பத்திரிகையாளனாகவும் பயணித்திருப்பானேயானால் ‘ இருப்பிடங்கள்’ அம்பலமாகிவிடும்.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஏராளமான சொல்ல மறந்த கதைகள், சொல்லப்பயந்த கதைகள், சொல்ல மறுத்த கதைகள், சொல்ல வேண்டிய
கதைகள் நெருடிக்கொண்டுதானிருக்கும். இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற சில கதைகள் ஆரம்பத்தில் தமிழ்நாடு யுகமாயினி இதழிலும் அதே காலக்கட்டத்தில்
அவுஸ்திரேலியா உதயம் இதழிலும் வெளியாகின.
எதிர்பாராதவிதமாக யுகமாயினியும் உதயமும் வெளிவராமல் நின்றுவிட்டன. எனினும் நான் சொல்லமறந்த மேலும் சில கதைகள்
எனக்குள் தவமியற்றிக்கொண்டிருந்தன. அவற்றுக்கு சிறப்பாகக் களம் தந்தது தேனீ இணையத்தளம். அவுஸ்திரேலியா தமிழ்முரசு இணையத்தமும்
இந்த சொல்லமறந்த கதைகளை பதிவுசெய்தது. கனடா பதிவுகள் இணையத்தளமும் சிவவற்றை பதிவேற்றம் செய்தது. இன்னும் பல இதழ்கள்,
இணையத்தளங்களிலும் இந்தக் கதைகளுக்கு பதிவேற்ற பாக்கியம் கிட்டியதாக அறிகின்றோம்.