சாதிய சினிமாவும் கலாசார சினிமாவும்:
சுகுணராஜனின் விமர்சனப்பார்வைகள் சுவாரஸ்யமானவை. சில சமயம் மிக அத்தியாவசியமானவை. அவர் பார்வைகள் அழுத்தமாக இருந்தாலும், அவற்றைக் குறித்த பிடிவாதங்கள் அவருக்கு ஏதும் கிடையாது. அவரது சுயத்தையே சமூக வரலாற்றில் வைத்து பார்க்கும் திறன் அவருக்கு உண்டென்பதால் அவரது கருத்துக்களை பிரபஞ்ச அளவுகோளாக்க வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் அறவே கிடையாது... ஒருவகையில் இதன் தொடர்ச்சியாக, பாரம்பர்ய மனமும், நவீன சுயமும் முயங்கும் புள்ளிகளில் சுபகுணராஜன் கவனம் நிலைகொண்கிறது.