கே.ஜே.அசோக்குமார் தனக்கென ஒரு கதைக்களனை வடிவமைத்துக் கொள்வதில் திறமை மிகுந்தவராக இருக்கிறார்.மானுடரின் வாழ்க்கைநோக்கை பரிசீலனை செய்யக்கூடிய களனாக அதை உருமாற்றிக்கொள்ளும் திறமையும் அவரிடம் வெளிப்படுகிறது.சமநிலையான பார்வையும் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் கூடிய கூறுமுறையும் கே.ஜே அசோக்குமாரின் பலங்களாக இத்தொகுப்பில் வெளிப்பட்டுருக்கின்றன. -பாவண்ணன்