வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து இன்றுவரையான இந்திய சமுதாயத்தில் பெண்கள் குறித்து ஒரு உயிர்சித்திரமான விளக்கத்தை
முதல் தடவையாக இந்நூல்தான் அளிக்கிறது. மேலும் அனைத்து துறைகளிலும் அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பினும் வாய்ப்புகளை
கையகபடுத்திக்கொள்வதற்கான வழிமுறைகளை கொண்டிருந்த சில பெண்கள் எப்படி ஆண்களுக்கு சமமாக தங்களுடைய உள்ளூரச் சிறப்பை நிரூபிக்க
முடிந்தது என்பது குறித்து இந்த நூல் ஆழ்ந்த கவனம் செலுத்துகிறது. மேலும் , பெண்களுடைய உண்மையான விடுதலையை நோக்கிய அவர்களது
முன்னோக்கிய பயணத்தில் அவர்களின் பங்கும் அவர்களுடைய பிரச்சனைகளும் இந்த ஆய்வு நூலில் அடையாளப்படுத்தப்பட்டு ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளன.
பெண்களைப் பற்றிய ஆய்வுகளில் ஆர்வம் கொண்டிருப்பவர்களுக்கு பயனளிக்கும் வகையிலான முயற்சியும் இந்த அகல விரிவான ஆய்வு நூலில்
மேற்கொள்ளப்பட்ருக்கிறது.