தீய எண்ணங்களும், தீய செயல்களும் அவர்களுக்கு உரிய தண்டனையைக் கொடுத்தே தீரும் என்பதை பீர்பால் நன்கு உணர்ந்திருந்த காரணத்தால்தான் அவர் அந்த கொடுமதியாளர்களின் சதித்ட திட்டங்களால் ஏற்பட்ட தொல்லைகளையும் தாங்கிக் கொண்டார் என்பதே வரலாறு. நாமெல்லாம் பார்வையுள்ளவர்கள் என்று கர்வத்துடன் பேசித் திரிகிறோம் உண்மையிலேயே பார்வை உள்ளவர்கள் என்று பெருமையுடன் பேசிக்கொள்வது சரிதான என்பதை சிந்திக்க வேண்டும். ஆக, மிகத் தெளிவாக சிந்திக்கும் தன்னையுடையவர்களே பார்வை உள்ளவர்கள். மற்றோரெல்லாம் பார்த்தல் உலகில் குருடர்களின் எண்ணிக்கைத்தான் அதிகமாக இருக்கிறது.