லாரி பேக்கரின் வீடுகள் தூக்கணாங்குருவி கூடுகள் ஒளியும், காற்றும் ஊடுருவும் மிதக்கும் வயல்வெளிகளாய் மாறி மனிதனை இயற்கையினுள் தாலாட்ட வைக்கிறது. தொன்மையும் புதுமையும் இணைந்த இவரது கவித்துவ ஓவியங்கள் முப்பரிமாணம் பெறும்போது அது ஓர் எளிய மக்களுக்கான படைப்பாக மாறுகிறது. எளிய மக்களின் படைப்பை வியந்து எளிய மனிதனாக மாற விரும்புகிறார் லாரி பேக்கர்.