நெருப்பு சூடு ஏற ஏற,சமைக்கப்படும் உணவு அடிப்பிடித்து நாற்றம் எடுப்பது போல்,அதிகார நெருப்பு ஏற ஏற சனநாயகம் அடிப்பிடித்து நாற்றன் வீசுகிறது.குடும்பம்,சாதி,மதம்,இனம்,பாலியல்,அரசு,கல்வி அமைப்பு - அனைத்து நிறுவனமயத்துள்ளும் சனநாயக மாண்புகள் கருகி நாற்றமெடுக்கின்றன.பருவநிலைச் சிதைப்பு,சூழல் கேடு,மண்ணில் கலைகள் அழைப்பு,மனசாட்சியற்ற அரசியல்.இலக்கியவினைகள் எனக் கருதி நாற்றம் வீசும் வாழ்க்கை பற்றியது இந்த எழுத்துகள்.
நஞ்சுண்ட பூமியின் நடமாட்ட காட்சியங்கள் தேடி அங்கன இங்கன என்று அலைய வேண்டாம்.அதிகாரத்தால் உயிர் பறிக்கப்பட்ட தோழன் ‘ரோஹித் வெமூலா’ நம்முன் நிகழ்கால நத்த சாட்சி.சாதி,மத அதிகாரத்துக்கு எதிராய் திமிறி எழுந்த தோழனுக்கு இந்தநூல் காணிக்கை.................