அபிமன்யூவாக தமிழ் நாடக உலகில் அறிமுகமானாலும் இலட்சிய நடிகராக நிலைத்து நிற்க்கும் எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதம் இந்நூல்.
எஸ்.எஸ்.ஆர் அவர்கள் ‘நடந்து வந்த பாதை’ என்று தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை தன் வாழ்க்கையை இளம் பிராயத்தில் இருந்துத் துவங்கி சொல்லிக்கொண்டு வருகிறார். தான் பிறந்த ஊர், படித்த பள்ளி, நாடக ஆர்வத்தை தூண்டிய ஆசிரியர்கள், நாடகம் பயின்ற டி.கே.எஸ். அண்ணாச்சிகளின் மதுரை பாய்ஸ் கம்பெனி, அவரின் அரசியல் வாழ்க்கை வரை படிப்பவர் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
உலகிலேயே தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினரான முதல் நடிகர். இவ்வகையில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், தமிழக முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆந்திர முன்னால் முதலமைசசர் என்.டி.ராமாராவ் ஆகியோருக்கு எஸ்.எஸ்.ஆரே முன்னோடி. தி.மு.க, அ.தி.மு.க, பார்வர்ட் பிளாக் போன்ற அரசியல் கட்சிகளின் பொறுப்பில் இருந்தாதலும் தனக்கென தனித்தன்மை பாதிக்கப்படும்போதெல்லாம் அரசியலை விட்டு விலகியே நின்றார். தன் கொள்கைக்கு ஒத்துவராத புகழ் வெளிச்சத்தில் இருக்க அவர் என்றுமே விரும்பியதில்லை என்பதை இந்த நூலில் உள்ள பல அத்தியாயங்கள் சொல்கின்றன.