இப்புத்தகத்தில்,திரைக்கதை உருவாக்கத்திலிருந்து,நடிப்பு,இயக்கம்,புகைப்படக்கலை,ஒளிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கையாளும் நுணுக்கங்கள்.என இன்னும் ஏராளமான தகவல்கள் எல்லோரும் புரிந்து கொள்ளும் படியான எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளன.
நடிப்புக்கென்று பல நல்ல பயிற்சிகளையும் விளையாட்டு முறைகளையும் நடிகர்களுக்கான அத்தியாயத்தில் விளக்கியிருக்கிறார்கள்.பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகர்களான அமீர்கான் மற்றும் ஷாருக்கான் உடன் பணி புரிந்த போது அவர்கள் ஒரு காட்சியில் நடிக்கையில் உடன் நடிக்கும் மற்ற எல்லா நடிகர்களின் உடல் பாவனைகளையும் அவர்களின் வசன உச்சரிப்பு நேரங்களையும் சரி செய்வதோடு மட்டுமல்லாமல் சரியான இடத்தில் ஒளி பற்றி பிரக்ஞையையும் பெற்றுக்கொண்டு.அதனை திரையில் சரியாக நடிபின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்.
“ஜடியாக்களை மனதில் மட்டும் வைக்காதீர்கள்,காகிதத்தில் குறித்து வையுங்கள்” எத்தனை சத்தியமான வார்த்தைகள்.உலகில் உள்ள பெரும்பான்மையான வெற்றிபெற்ற திரை மேதைகளின் தாரக மந்திரம் ‘அந்நியன்’ திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தபோது இயக்குனர் ஷங்கர்,அவருடைய உதவி இயக்குனர்களுக்கு இந்த வார்த்தைகளையேச் சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
சக தொழிலாளரை மதித்து அவரின் உழைப்பைப் பாராட்டுவதில் இருந்து,எப்படி ஒற்றுமையாக இணைந்து பணியாற்றி நாம் விரும்பும் கற்பனையை அடைய முடியும் என்பது வரை பல டிப்ஸ் இப்புத்தகத்தில் உள்ளன.உண்மையிலேயே அதைப் பற்றியெல்லாம் நான் படப்பிடிப்புத் தளங்களில் பல நேரங்களில் சிந்தித்ததுண்டு.அதை அப்படியே இப்புத்தகத்தில் படிக்க நேர்ந்தபோது ஆச்சரியமாக இருந்தது.