மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது
உக்கிரம் என்பது நிலவின் வெளிச்சத்தில் அருகும் தனிமை’ என்று எழுதும் குமரகுருபரனின் கவிதைகளில் வேட்கையின் பெருநெருப்பும் வாழ்தலின் பெருநெருப்பும் வாழ்தலின் பெருந்தனிமையும் இன்றை ஒன்று இட்டு நிரப்புகின்றன. இந்தக் கவிதைகளுக்குத் திட்டவட்டமான குவிமையம் என்று ஒன்றில்லை. அந்தரத்தில் காற்றில் சுழலும் மலர்கள் போல இக்கவிதைகள் துவக்கமும் முடிவும் அற்ற ஏகாந்த வெளியில் தம்மைத் திறந்துகொள்கின்றன மூர்க்கமான காட்சிப்படிமங்களின் ஊடாக செறிவான மொழிக் கட்டமைப்பும் நுண்மையான ஓசை இன்பமும் கொண்ட இக்கவிதைகள் எழுப்பும் உணர்வுகள் நவீன கவிதை மொழிக்கு புடிய பங்களிப்பைச் செய்கின்றன.