இளைஞர் லெனியைப் பற்றி மூன்று நவீனங்கள் இயற்றிய பின்னரே லெனின் வாழ்க்கைக் கதை என்னும் எனது பிரதான நூலை எழுத முற்பட்டேன். எவ்வளவோ தயக்கங்களும் பதற்றங்களும் ஏற்பட்டன. இந்த மாபெரும் வாழ்க்கை பற்றி விவரிக்க எனக்கு வலிமை போதுமா? என் நண்பர்கள் பதிப்பு ஆசிரியர்கள், புலவர்கள், கட்சி ஊழியர்கள் ஆகியோர் யோசைனைகள் கூறி எனக்கு நிறைய உதவினார்கள் தோழர்களின் நல்லியல்பு வாய்ந்த ஆதரவை நான் உணர்ந்தேன். முக்கியமாக லெலினின் வாழ்க்கை பற்றி எளிமையாக உள்ளன்புடன் எழுதப்பட்ட நூல் வாசகர்களுக்கு மிகவும் தேவை என்று தெரிந்து கொண்டேன்.