ஒரு சிறுகதையின் தரம், அதன் வடிவத்துக்கும் உள்ளடக்கத்துக்குமான கச்சிதமான இயைபு. இந்த இயைபு சாத்தியப்படுத்தும் புரிதல், ஒரு
படைப்பில் செயல்படும் உலகப் பார்வை, அரசியல் நோக்குநிலை, சமூக அக்கறை, அழகியல் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு
செய்யப்பட்டுத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள கதைகள்.
இவற்றில் ஆறு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவை ; மூன்று அரபு எழுத்தாளர்கள் - அவர்களில் இருவர் பெண்கள்; ஒரு தலித் படைப்பாளி ;
ஒரு முனையில் காஃப்கா , மற்றொன்றில் கார்க்கி; சீனச் சிறுகதை ஒன்று; தாய்லாந்திலிருந்து இன்னொன்று.
நவரத்தினம் போல ஒன்பது சிறுகதைகள்
வாசகர்களின் மன உலகம் விரிவடைய
இன்னும் பெரியதோர் உலகத்தை அவர்கள் எட்டிப் பார்க்க.