கன்னடத்தின் பிரபல எழுத்தாளரான திருமதி வைதேகி அவர்களின் சமீபத்திய சிறுகதைகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது; இதில் எல்லா கதைகளிலும்
ஆண், பெண் இணைந்த உலக மொன்று உள்ளது; அந்த உலகத்தில் பிரிதலும் உண்டு; சுவாரசியமான பேச்சு மட்டுமின்றி, துன்பத்தின் வரிகளும்
இழையோடுகிறது.சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தாலும் அதனூடே துக்கத்தின்சாயலும் படிந்துள்ளது; எதிர்மறை பாவனைகளை சேர்த்துக் காட்டும்
கலை, வைதேகியின் கதைகளில் முக்கியமாக்கப்பட்டுள்ளது. இது இந்தத் தொகுப்பின் தலையான உருவகம். அதனால்தான், ‘கிரவுஞ்சப் பட்சிகள்’
என்பது ஒரு கதையின் தலைப்பு மட்டுமின்றி, இந்தத் தொகுப்பிற்கும் தலைப்பாய் அமைந்துள்ளது. இக் கதைத் தொகுப்புக்கு 2009ல்
சாகித்திய அகாதெமி விருது கிட்டியது.
வைதேகி ( ஜானகி சீனிவாசமூர்த்தி 1945 ) கன்னடத்தில் எழுதி வரும் மூத்த எழுத்தாளர். தென் கன்னட மாவட்டம் குந்தாபுரத்தில் பிறந்தவர்,
கதை, கவிதை, நாவல்,கட்டுரை, குழந்தைகள் நாடகம், மொழிப்பெயர்ப்பு, முதலியன எழுதிப் புகழ் பெற்றவர். இவருக்கு இதுவரை 14 விருதுகள்
கிடைத்துள்ளன. மத்திய சாகித்திய அகாதெமி விருது, குறிப்பிடத்தக்கவை.
இந்நூலின் மொழிபெயர்பாளர் ஜெயந்தி சாகித்திய அகாதெமியின் தென் மண்டல அலுவலகத்தில் பணிப்புரிபவர். ‘ சங்கரி’ என்ற
சிறுகதை, கவிதைகள், கட்டுரைகளும் எழுதி வருகிறார். மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்திலிருந்தும் தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறார்.