கடல்
ஆசிரியர்: ஜான் பான்வில், தமிழில்: ஜி. குப்புசாமி
முதுமையை நோக்கிச் செல்லும் ஒரு கலைஞனின் இளமை நினைவுகள்தான் ‘கடல்’ நாவல். ஐரிஸ் நாவலாசிரியரான ஜான் பான்விலின் புக்கர் பரிசு பெற்ற புத்தகத்தைச் செறிவாக மொழிபெயர்த்து இருக்கிறார் ஜி.குப்புசாமி. மனைவியை இழந்து வாடும் ஒரு நடுத்தர வயது ஆண், இளமையில் தான் வாழ்ந்த கடற்கரையோர நகரத்துக்குச் செல்கிறார். அந்தப் பயணமும் ஊரும் அவருக்கு இளமைப் பருவத்தின் பசுமையான நினைவுகளைக் கிளறி விடுகின்றன. ‘சின்ன மென்மையான இயந்திரம் ஒன்று இயங்கத் தொடங்கி, நின்று, மீண்டும் ஆரம்பித்து, மீண்டும் நிற்பதைப் போல சன்னமான குறட்டைச் சத்தம் கேட்டது’ என்பது போன்ற விநோத உதாரணங்களும் நுட்பமான விவரிப்புகளும் நாவல் முழுக்க விரவிக்கிடக்கின்றன. இது பரபரப்பான கதை இல்லை. ஆனால், மனித மனத்தின் ஆழம் தேட விரும்பும் ரசிகர்களுக்கு நல்விருந்து!