ஜமீந்தார்கள் என்றாலே அவர்களுடைய ராஜ கம்பீரமும்,மிடுக்கும்,அதிகார தொனியும்தான் நினைவுக்கு வரும்.
ஆனால் அவர்களிடமும் மென்மையான மனம் இருந்ததை அவர்களுடைய ஆன்மிக நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.தாம் பாரம்பரியமாக வழிபடும் கோயில்கள் மட்டுமல்லாமல்,பிற கோயில்களுக்கும் நன்கொடைகள்,புனரமைப்பு என்று பல சேவைகளை ஆற்றியிருக்கிறார்கள்.
இப்போதும் ஜமீன்தாரர்களின் வாரிசுகள் தம் முன்னோர்களின் அடிச்சுவட்டில் ஆன்மிகப் பணியைச் சற்றும் தொய்வில்லாமல் மேற்கொண்டிருக்கிறார்கள்.அந்தச் சிறப்பை விளக்குவதுதான் இந்தப் புத்தகம்.
கோயில்களில் முதல் மரியாதையை ஏற்கும் இந்த ஜமீந்தார்கள் அதற்கான தகுதி படைத்தவர்கள்,அந்த அளவுக்கு இறைப்பணி ஆற்றியிருக்கிறார்கள் என்பதை இந்தப் புத்தகத்தில் இழையோட்டமாக உணரமுடியும்.