இரவு
இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும் தொகுப்பு:
இரவு உலகை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து காட்டும் உண்மை வாழ்வியல் கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கட்டுரையும் வித்தியாசமான இரவு உலகை காட்சிப்படுத்துகின்றது. இலக்கிய படைப்பாளிகளின் இரவு உலகம் எத்தகையது, அவர்களின் இரவுப் பணி அனுபவங்கள், என்னென்ன சிரமங்களை, அவலங்களைக் காண்கிறார்கள்.... என்று அவர்களே எடுத்துச் சொல்லும் கட்டுரைகள்.
இயற்கையான இவ்வுலகின் இருளில் சிலர் விழிபெற்று உண்மையைக் காண்கின்றனர். கண்டவைகளை சிலர் மனதினுள் புதைத்து வைத்துக் கொள்கின்றனர். சிலர் பகிர்ந்துகொள்கின்றனர். ஒருவர் கண்ட உண்மைக்கும் இன்னொருவர் காணும் உண்மைக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையேயான பேதம்.