இரண்டு விரல் தட்டச்சு
அசோகமித்திரனின் அண்மை ஆண்டுகளில் எழுதிய பதினெட்டு கதைகளின் தொகுப்பு இந்நூல்.நீண்ட காலம் எழுதிவரும் கதை நுட்பரின் அநாயாசமான திறனையும் கலாபூர்வமான பார்வையையும் மானுடப்பற்று மிளிரும் கரிசனத்தையும் இத்தொகுப்பிலுள்ள கதைகள் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன. நினைவிலிருந்தும் தொல்கதைகளிலிருந்தும் நிகழ்வாழ்வின் அவதானிப்பிலிருந்தும் உருவான இக்கதைகள் அசோகமித்திரனின் புதிய படைப்பு நோக்கை முன்வைக்கின்றன.