இந்தியா 2020 மாணவர்களுக்கு
டாக்டர் கலாம் ஹைதராபாத் நகரில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவுக்குப் பிறகு. தம்மிடம் வந்து கையெழுத்து கேட்ட பத்து வயதுச் சிறுமியிடம் ‘ உன் எதிர்கால ஆசை என்ன?’ என்று வினாவினார். ‘ ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவில் நான் வாழ வேண்டும்.” எந்தவிதத் தயக்கமும் இன்றிப் பதில் வந்தது. அந்தச் சிறுமிக்கும், அவளது இலட்சிய வேட்டையில் பங்குகொள்ளும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த நூல் சமர்ப்பணம்.