தென்கிழக்காசியாவின் மிகச்சிறந்த நூலகம் ஒன்றினை யாழ்ப்பாணதில் தமிழ் மக்கள் நிறுவிப் பெருமைப்பட்டனர். தமிழ் மக்களுடைய அறிவுத்தேடலினதும் கலாசார பற்றினதும் சின்னமாகவும் யாழ்ப்பாணத்தின் குறியீடாகவும் விளங்கிய நூலகம் 1981இல் நிகழ்ந்த திட்டமிட்ட வன்முறையினால் எரியுண்டது. நிகழ்ந்த எழுச்சிகளையும் சோகங்களையும் தாங்கிய வரலாற்றுப் பயணத்தை பதிவு செய்யும் ஆவணப்படம் இது.