அம்பேத்கரை அறிந்து கொள்வோம்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தன் 65 ஆண்டுகால வாழ்வில் ஆங்கிலத்தில் பேசியது எழுதியது அனைத்தும் 37 தொகுதிகளாக தொகுக்கப் பட்டுள்ளன.
அதனை மஹாராஷ்டிர அரசு இந்தி, மராத்தி மற்றும் ஏனைய இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளது.
அதில் முதல் 20 தொகுதிகளில் டாக்டர்.அம்பேத்கர் கையாண்டுள்ள பொருமங்கள் குறித்த அறிமுகத்தை இந்நூல் வழங்குகின்றது.
அன்னல் அம்பேத்கரின் எழுத்துகளை நேரடியாய்ப் படிப்பதற்கு மாற்று இல்லையென்றாலும் பல்துறை வல்லுநரான அவர் எந்தத் தொகுதியில் என்ன எழுதியுள்ளார் என்பதை அறியவும் அவரது அடர்ந்த எழுத்துகளில் நுழைவதற்கான ஒரு முன் தயாரிப்பாகவும் பயன்மிக்கதாய் இந்நூல் திகழ்கின்றது.