கள்ளம் கபடம் இல்லாத வெள்ளையான பருவம் குழந்தைப் பருவம்.நம்முடனே வளர்வதால் நம்முடைய கள்ளம் கபடம்,சூது வாது என அனைத்தும் குழந்தைகளுக்கும் படிப்படியாக எப்படி ஏறுகிறது என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்.
ஆழி என்ற குழந்தை எல்லோர் வீட்டிலும் இருக்கும் குழந்தை தான்.இந்தத் தொகுப்பில் அழைவரும் உங்கள் வீட்டுக் குழந்தைகளையும் காண்பீர்கள்.இந்த அவசரகால உலகத்தில் இருந்து விலகிக் கொஞ்ச நேரம் குழந்தைகள் உலகிலும்,குழந்தைகள் மொழியிலும் லயிக்க இந்தத் தொகுப்பு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.