இந்த கதையில் இடம் பெற்றிருக்கும் எல்லாப் பாத்திரங்களையும் செலுத்தும் ஆதார விசை காமம். அது ஒரு பெரும்பசியாக அனைவரையும் வாட்டியெடுக்கிறது. பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும் என்பது பழைய ஒளவைப்பாட்டியின் வரி. வயிற்று பசிக்கு மட்டுமல்ல. காமப்பசிக்கும் அது பொருந்தக்கூடிய வரி. சிலர் எல்லாருக்கும் காட்சிப்பொருளாகி, அவற்றைப் பறக்கவிட்டு மீண்டு வரமுடியாமல் தவிக்கிறார்கள். சிலர் யார் பார்வையிலும் படாமல், அந்தரங்கமாக பறக்கவிட்டு, தொடர முடியாமல் தவிக்கிறார்கள்.