ஆடும் மயில்
குழந்தைக் கவிஞர்
அழ.வள்ளியப்பா
”குழந்தைக் கவிஞர்” என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் அழ.வள்ளியப்பா அவர்கள்.
13வயதில் பாடல் எழுதத் துவங்கியவர். இந்தியன் வங்கியில் எழுத்தராகச் சேர்ந்த இவர் படிப்படியாக உயர்ந்து காரைக்குடி வட்டார மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அழ.வள்ளியப்பா குழந்தைகளுக்காக 60 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் 8 நூல்கள் மத்திய அரசுகளின் பரிசுகளைப் பெற்றுள்ளன.
1950-ஆம் ஆண்டு குழந்தைகளுக்காக எழுதுவோரை ஒன்று சேர்த்து, “குழந்தை எழுத்தாளர் சங்கத்”தை நிறுவினார். பல குழந்தை எழுத்தாளர்களை உருவாக்கினார். குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.
கவிமணி. இராஜாஜி, தி.ஜ.ர போன்ற அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர். இவரது குழந்தை இலக்கியப் பணியைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் 1982-இல் “தமிழ் பேரவைச் செம்மல்” பட்டம் வழங்கிச் சிறப்பித்தது
இவரது புகழ்பெற்ற நூலான மலரும் உள்ளம்-இரண்டாம் தொகுதி, ஆடும் மயில் என்ற பெயரில் வெளியிடப்படுகிறது