புத்தகத்தில் வழக்கத்துக்கு மாறானது எதுவும் நடக்கவில்லை. கதை மாந்தர்கள் உயிரோடு, உடல் நலத்தோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் நேரவில்லை. அப்துல்லாவுக்குக் காயம் பட்டதுதான் வித்தியாசம். ஆனால் காயங்களும் விரைவில் ஆறி விட்டன. என்னுடைய நண்பர்கள் சிறப்பான அருஞ்செயல்களை இதுவரை ஆற்றவில்லை, தங்கள் சொந்த ஊருக்கோ தங்களுக்கோ அவர்கள் எதனாலும் சிறப்பான புகழ் தேடித் தந்து விடவில்லை. ஆனாலும் முக்கியமான ஒன்று அவர்களுக்கு நிகழத்தான் செய்தது. சில கோடைக் கால வாரங்களில் பையன்கள் நிறைய மறு சிந்தனை செய்தார்கள், எத்தனையோ விஷயங்களில் சீர்பட்டார்கள். வீரச்செயல்களுக்கு, அருஞ்செயல்களுக்குத் தாங்கள் தயார் என்பதைக் காட்டினார்கள். தேவைப்பட்டால் அவர்கள் கட்டாயமாக அருஞ்செயல்கள் புரிவார்கள்.
முஸ்தாய் கரீம்