நூலாசிரியர் புலவர் சீ.சந்திரசேகரன் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று, கும்பகோணத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு
பெற்றவர். சித்தர்கள், மகான்கள் மீது கொண்ட பிடிப்பால் கடந்த பல ஆண்டுகளாக பொதிகைமலை, சதுரகிரிமலை, அண்ணாமலை, இமயமலை இன்னும்
பல இடங்களுக்கும் சென்று வருபவர். சித்தர்கள், மகான்கள் அடங்கிய இடங்களுக்குச் சென்று வழிபடுவதைப் பெரு விருப்பமாகக் கொண்டவர். இதுவரை
500-க்கும் மேற்பட்ட இடங்களுக்குச்சென்று வழிப்பட்டவர். சித்தர் வழிபாட்டில் விருப்பமுடையவர்கள் பயன்பெற வேண்டி, தாம் தரிசித்த இடங்களுள்
150 இடங்களைத் தொகுத்தார். அதை “ சித்தர் தரிசனம்” எனும் பெயரில் கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டது.
தற்பொழுது சித்தர் தரிசனம் தொடர்ச்சியாக 200 இடங்களைத் தொகுத்து “ சித்தர் பீடங்கள் 200” எனும் நூல் வெளிவருகிறது. நூலாசிரியர் பல்வேறு
கவிதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். சித்தர் இயல்பு கூறும் தென்பொதிகை சித்தராற்றுப்படை எனும் நூலை செய்யுள் வடிவில் இயற்றியுள்ளார்.
சித்தர் சமாதி பீடங்களைத் தரிசிப்பதையும் அவை இருக்குமிடங்களை நூல்வாயிலாக வெளிப்படுத்துவதையும் சித்தர்கள் தமக்களித்த பெரும்
பேறாகக் கருதுகிறார்.