நீங்களும் நடிக்கலாம்
நடிப்பு என்பது என்ன ? அதன் சூட்சமங்கள் என்ன? நிஜ வாழ்க்கையிலிருந்து நடிகன் எதையெல்லாம் கற்று கொள்ள வேண்டும்? நடிகர்களிடமிருந்து திரைத்துறை எதை எதிர்பார்க்கிறது? இயக்குநர்களின் சவால்களை ஒரு நடிகர் எப்படி பூர்த்தி செய்ய வேண்டும்? இப்படியான அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லும் புத்தகம் இது.
கூத்துப்பட்டறையில் ஐந்தாண்டு காலம் மாணவராக இருந்து ந.முத்துலிங்கசாமியிடம் நடிப்பு, நாடக எழுத்து ஆகியவற்றை கற்ற தம்பிசோழன், பள்ளி கல்லூரிகள், தொண்டு நிறுவணங்கள், நிழல் பதியம் குறும்பட இயக்கம், கார்ப்ரேட் கம்பெனிகளில் பயிற்சிப் பட்டறைகள் நட்த்திக் கொண்டிருக்கிறார். திரைத்துறையில் விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட நடிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் திரைக்கதையில் உள்ள கதாபத்திரத்தை முழுமையாக உள்வாங்கி கேமராவில் வெளிப்படுத்துவதற்கு உதவியிருக்கிறார். தற்போது திரைத்துறையில் உதவி இயக்குநராக இருந்தபடியே வார இறுதி நாட்க்களில் சினிமா நடிப்புக்கான பயிற்சிப் பட்டறைகளும் நட்த்தி வரும் இவரது முதல் புத்தகம் இது. நடிப்பிஉன் சிண்டுகளையும் சிக்கல்களையும் அனுபவங்களின் வழியாக எளிமைப் படுத்தியிருக்கும் இந்தப் நடிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் பொக்கிஷம்.