நீதிமன்றம் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் வழக்காடிகளை உள்ளடக்கும். இவர்கள் எல்லாரும் மனிதர்கள். பலமும் பலவீனமும் உடையவர்கள். குறையும் நிறையும் உடையவர்கள் என்றாலும் இவர்கள் சட்டத்தின் வரம்பிற்குள்ளும் சமூகப் பொறுப்பிற்குள்ளும் உறுதியாய் நின்று கடமையாற்ற வேண்டியவர்கள். 2009ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் நடந்த காவல்துறை வெறியாட்டம் வரலாற்றில் கருப்பு தினமாக அமைந்த அத்தினத்தினை பற்றிய செய்திகளை தொகுத்து நாவலாக மாற்றியிருக்கிறார் எழுத்தாளர்.