சிறுகதை என்கிற வடிவத்துள் வலிகளை இறக்கி வைக்க முடியும் என்கிற உண்மையைக் கண்டுணர்ந்தபின் அவ்வடிவம் மனதுக்கு நெருக்கமாகிவிட அதைப் பற்றிக்கொண்டு, இந்த விஷயத்தை எழுதவேண்டும் என்கிற எண்ணத்தைத் தவிர வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதத் தொடங்கியபின், எந்தக் கதையையும் இப்படிதான் தொடங்கவேண்டும் இப்படிதான் முடிக்கவேண்டும் என்கிற எந்த முன்னேற்பாடும் இல்லாமல் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொப்பே இந்நூல்.