கேது விஸ்வநாத ரெட்டி கதைகள் :
இந்த கதைகள் ஆந்திரப் பிரதேசத்துக் கரிசல் கதைகள், மேலும் தெலுங்குச் சிறுகதைகளைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தையும் தாகத்தையும் இவை ஏற்படுத்தும், அடுத்த வீட்டு இலக்கியம் குறித்து, நம்முடைய தமிழ்ச் சிறுகதைகளை முன்வைத்து, ஒப்புநோக்க இந்தக் கதைகள் உதவும், இந்தக் கதைகளில் இடம் பெறும் பாத்திரங்கள் சமூகத்தின் பல தளங்களைச் சேர்ந்தவர்கள் – விவசாயி, ஆராய்ச்சி மாணவர், தேர்தல் அதிகாரி, ரயில் சகபயணி, அரசியல்வாதி, காவல்துறை அலுவலர். இல்லத்தரசி எனப்பலர். இந்தச் சிறுகதைத் தொகுப்பு தெலுங்கு பல்கலைகழகம், பாரதீய பாஷத், சாகித்திய அகாதெமி ஆகியவற்றின் பரிசுகளை ஒருசேர வென்ற சிற்ப்பு பெற்றது.
கேது விஸ்வநாதரெட்டி தெலுங்கு வாசகர்களிடையே மிகவும் பிரபலமானவ, சாகித்திய அகாதமி பரிசு உட்பட. ஏழெட்டு பரிசுகளுக்கு மேலாக இவர் பெற்றிருக்கிறார். கல்லூரி, பல்கலைக்கழகத் தளங்களில் பல்வேறு உயர்நிலைப் பொறுப்புகளை வகித்த கேது விஸ்வநாதரெட்டி எழுத்துலகின் பலதுறைகளில் தன் பங்கைச் செலுத்தியிருக்கிறார்.
இளம்பாரதி தெலுங்கின் மூலச் சுவை குன்றாமல் தமிழில் இந்தச் சிறுகதைகளைத் தந்திருக்கிறார். இவர் சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்புக்கான பரிசு பெற்றவர். இவருடைய எழுத்தனுபவ நேர்த்தியை இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் காணலாம்.