கு.அழகிரிசாமி நினைவோடை
சந்தித்து நட்பும் உறவும் கொண்டிருந்த ஆளுமைகள் பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடை வரிசையில் 8ஆவது நூல் இது. மென்மையும் நேரடியுமான சிறுகதைகள் மூலம் தமிழில் முக்கிய இடத்தைப் பெற்றவரான கு.அழகிரிசாமியின் இயல்புகளையும் எழுத்துச் செயல்பாட்டின் பின்னணிகளையும் இந்நூல் முன்வைக்கிறது. அழகிரிசாமியைச் சந்திப்பதற்கு முன்பே அவருடைய கதைகளைச் தேடி வாசித்த வாசகரான சுந்தர ராமசாமி நேர்ப் பழக்கத்தில் அவருடன் கொண்டிருந்த நட்பு நெருக்கமானது. இலக்கியம் சார்ந்து சமரசமற்றது.