நமக்குள் பொதுவான மொழியும்,பொதுவான உணர்நுட்பங்களும் இல்லாமல் போயிருக்கலாம்.ஆனால்,நாம் அனைவரும் பொதுவான ஒரு மௌனத்தையே பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார் கவிஞர் மிராஸ்லாவ் ஹோலுப்.பேசப்படாத அந்த மௌனத்தின் பின்னுள்ள கதையை தான் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிக்காட்டுகிறார்.
அவரது கதையுலகம் புனைவின் விசித்திரங்களை கொண்டது.தோற்றவர்களின் வலியை,புறக்கணிக்கபட்டவர்களின் முணுமுணுப்பை,தனிமையில் பிடிக்கப்பட்டவர்களின் கண்ணீரை,தீமையின் வெறியாட்டத்தை அடையாளம் காட்டும் இக்கதைகள் தமிழ் சிறுகதைகளின் அடுத்த கட்ட சாதனைகளை என்றே கூற வேண்டும்.