மனித வாழ்க்கை வசதிகள் நாளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கைப் பயன்பாட்டிற்கான சாதனங்கள் நாளும் முன்னேறிக்கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் பெருமளவும் மின் ஆற்றலைச் சார்ந்தே இயங்கி வருகின்றன. எனில், இம் மின்னாற்றலை உற்பத்தி செய்யும் வளவூற்றுகள் இன்னும் எத்தனை நாளைக்கு வரும் என்பது கேள்விக்குரியதாயிருக்கிறது.
இந்நிலையில் மாற்று வழிகளில் ஆற்றலைப் பெறுவதற்கான முயற்சிகளில் அறிவியலாளர்கள் இறங்க, அணுக்கரு ஆற்றல் இத்தேவைகளை நிறைவு செய்யும் என நம்பப்படுகிறது