இதுவரை உடலரசியல், மூன்றாம் பாலினப் பிரச்சினைப்பாடுகள், குழந்தைகளின் அக உலகம் என வெவ்வேறு உலகங்கள் சார்ந்த உரையாடல்களைத் தாங்கி வந்திருக்கிறது. இம்முறை நாம் கலையின் மீதான தணிக்கை,படைப்பு சுதந்திரம் மறுக்கப்பட்டு சிறையிடப் பட்டோர், நாடு கடந்தோர், வன்கொலை செய்யப்பட்டோர் மற்றும் அவர்களின் படைப்புலகம் ,சார்ந்திருந்த நம்பிக்கைகள் புலம் பெயர்ந்ததும் உருவான கலை அவற்றிற்கு அனுமதிக்கப்பட்ட வெளி குறித்து பேச விழைகிறோம் .இதன் இணைப்பிரதியாக மேற்சொன்ன உலகப் பொதுவான இலக்கியப் பார்வை நம் முன் நிற்கும் கலை சார்ந்த பார்வைகளை மீளுறுதி செய்யவும் அடிப்படைகளை நிறுவிப் பார்க்கவும் பரிட்சிக்கவும் துணை செய்யலாம்.