அயல் சினிமா இதழ்
வெகுஜன சினிமா இதழ்களுக்கு சவால் விடும் அளவிற்கு நேர்த்தியான வடிவமைப்புடன் டிஸ்கவரி புக் பேலஸ் மூலமாக அயல் சினிமா ஆகஸ்ட் மாதம் (2017) முதல் வெளிவருகிறது.
‘அயல் சினிமா’ என்றவுடன் உலக சினிமா பற்றியது மட்டுமே இதழ்முழுக்க இருக்கும் என்று பலர் நினைத்திருப்பார்கள். ஆனால், தமிழ் திரைப்படங்கள்,
பிற இந்திய மொழி படங்கள் என உலகத் தரத்துக்கு உயர்ந்து நிற்கும் அனைத்து மொழிப்படங்களையும் சரியாகவும், படைப்பாளியின் நோக்கத்தை தெளிவாகவும் நமக்கு உணர்த்துவதே அயல் சினிமா!
அயல் சினிமா ஆகஸ்ட், 2017 இதழ்
வெகுஜன சினிமா இதழ்களுக்கு சவால் விடும் அளவிற்கு நேர்த்தியான வடிவமைப்புடன் Vediyappan M Munusamy அயல் சினிமா ஆகஸ்ட் மாத இதழ் கொண்டு வந்திருக்கிறார்.
‘அயல் சினிமா’ என்றவுடன் உலக சினிமா பற்றிய இதழாக இருக்கும் என்று பலர் நினைத்திருப்பார்கள். ஆனால், தமிழ் திரைப்படங்கள் அல்லாத பிற இந்திய மொழி படங்களையும் இந்த இதழ் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. குறிப்பாக, சினிமா துணுக்கள் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.
Karundhel Rajesh யின் “அலைகள் இங்கு வரவேற்கப்படுகின்றன” கட்டுரையில் தமிழ் சினிமாவுக்கும், மலையாள சினிமாவுக்குமான இடைவெளியை சரியாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
அயல் சினிமா என்று பெயர் வைத்ததால் தமிழ் சினிமாவை பற்றி பேசாமல் இல்லை. Cable Sankarன் ’பொன் முட்டை’ கட்டுரை மிக முக்கியமான ஒன்று. தற்போதிய டிஜிட்டல் யுகம் சினிமாவுக்கு எந்த அளவுக்கு பக்கபலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தியேட்டரில் வெளிவரும் திரைப்படங்களுக்கு சவாலாகவும் இருப்பதை சொல்லும் கட்டுரை.
நான் மிகவும் ரசித்தது Pradeep Pandian Chelladurai யின் ”பாலிவுட்... பாகிஸ்தான்... லாலிவுட்” கட்டுரை. உண்மையில் பாகிஸ்தான் சினிமா பற்றி ஒரு புரிதல் இல்லாமல் இருந்தேன். அதற்கு அரசியல் காரணம் என்று கூட சொல்லலாம். இந்தக் கட்டுரையில் பாகிஸ்தானின் ஒரு சில படங்களை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை.