இரா.சிவராமனைப் பற்றி.........
இந்தியாவின் அறிவியல் பெருமையை பறைசாற்றும் வகையில் இவர் இயற்றிய ‘இணையில்லா இந்திய அறிவியல்’என்ற தமிழ்ப் புத்தகம் பொது மக்கள் மற்றும் மாணவர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.இப்புத்தகத்திற்கு உரத்த சிந்தனை அமைப்பின் விருது கிடைத்துள்ளது.
கதையுடன் கணிதத்தை திறம்பட விளக்கும் புத்தகமாக இவர் இயற்றிய “கதையில் கலந்த கணிதம்”என்ற புத்தகம் விளங்குகிறது.இப்புத்தகம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் பல சுவாரசியமான நூல்களை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
‘தி இந்தி’, ‘தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்’ போன்ற புகழ்பெற்ற நாளிதழ்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கணித புதிகளை பை கணித மன்றம் சார்பில் வழங்கி வருகிறார்.சென்னை ரிப்போர்ட்,மஞ்சுரி,சுட்டி விகடன் போன்ற இதழ்களில் கணிதத்தை பிரபலபடுத்த பல கட்டுரைகளை எழுதி வருகிறார்.அறிவியல் சஞ்சிகைகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.கணிதத்தின் மேன்மையையும்,பண்பாட்டினையும் அனைவரும் உணர வேண்டும் என்பதே இவரது வாழ்வின் முக்கிய இலட்சியமாக விளங்குகிறது.