சமூக ஊடகம் ஒருவரது கவனப்பரப்பைச் சில நிமிடங்களாகக் குறுக்கியிருக்கிறது என்பது உண்மைதான். இந்தச் சூழலில்தான் Micro Fiction, Flash Fiction போன்ற வடிவங்கள் தோன்றி செல்வாக்கு அடைகின்றன. யோசித்தால் இந்தக் குறுவடிவங்கள் புதியவை அல்லதாம். நாவல் வளர்ந்து பிரபலமடைந்த நவீன காலத்திலேயே Somerset Maugham, Ambrose Pierce போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
இது படைப்பின் அளவைக் குறித்தது மட்டுமல்ல; புனைவு, அபுனைவு. பத்தி எழுத்து, கடிதம், விமர்சனம், டயரிக் குறிப்பு போன்ற எழுத்தின் வடிவங்களிளிடையே இருந்த கோடுகளும் இப்போது துலக்கமாக இல்லை.
இன்றைய காலகட்டத்தில் ஒன்று எப்போதும் இன்னொன்றாகவும் இருக்கிறது. மேற்கே David Sedaris, Lydia Davis போன்றவர்கள் இந்த வடிவ உடைப்பை நிகழ்த்தி வருகிறவர்களில் முக்கியமானவர்கள். மார்க்வஸ், இடாலோ கால்வினோ போன்றவர்களும் இதுபோன்ற குறுவடிவங்களை நிகழ்த்திப் பார்த்திருக்கிறார்கள்.
மர்ம காரியம் தொகுப்பில் உள்ள எண்ணங்களும் அவ்விதமே.
No product review yet. Be the first to review this product.