கேரளத்தின் வெவ்வேறு திணைகளில் வாழும் இனத்தவர் மொழிந்த கவிதைகளின் தொகுப்பு இந்த நூல். கவிதைத் தொகுப்பு என்ற நிலையைக் கடந்து இந்தத் திரட்டுக்கு பன்முக விரிவும் பன்னோக்கும் உள்ளன.
நாம் இதுவரை அறிந்திருக்கும் நாகரிகமான மொழிக்குக் கருவான ஆதி மொழியைப் பேசுகிறது. நாம் இதுவரை பேணி வந்திருக்கும் கலாச்சாரத்தின் உள்ளீடின்மைகளை அம்பலப்படுத்துகிறது. பண்பாட்டின் மானுட விழுமியங்களைச் சுட்டிக் காட்டுகிறது. நாம் இதுவரை ஒப்பனை துலங்கக் காட்டியவை அல்ல கவிதை; அது உண்மையின் தன்னெழுச்சி என்று விளக்குகிறது.
இவற்றின் வாயிலாக மொழி, பண்பாடு, கவிதை என்று நாம் காபந்து செய்து வைத்திருக்கும் சங்கதிகளைவிட இதுவரை பேசப்படாமலிருந்த மனிதர்களின் மொழியும் வாழ்வும் எந்த வகையிலும் குறைவானதல்ல என்பது வெளிப்படையாகிறது. கூடவே நமது 'மகத்தான' பண்பாட்டுக்கு மேலதிக அர்த்தத்தையும் விரிவையும் இந்தக் கவிதைகள் சேர்க்கின்றன.
மலையாள இலக்கியத்தைக் கேரள இலக்கியமாக மாற்றியதில் பழங்குடிக் கவிதைகளின் பங்களிப்பு முதன்மையானது. புதுப்பெருக்கால் நதியை வளப்படுத்தியதற்கு இணையானது.
சுகுமாரன்
No product review yet. Be the first to review this product.