ஒரு நொடியில் கட்டுப்பாடிழந்து கைகலப்பு பற்றிக் கொண்டதில் அலறல்களும் கதறல்களும் அந்த இடத்தை ஆக்கிர மித்தன. மோதித் தள்ளும் உடல்களும் ஓங்கியடிக்கும் கைகளு மாய்க் கலவரம் பயங்கரமாய்ப் பற்றிக்கொண்டது. வெளாந் தோட்டக் கவுண்டரின் தோளில் விழுந்த அடியில் நிலைகுலைந்து கோயில் திண்ணையில் சாய்ந்தார். நஞ்சப்பன் தாவி அவரைப் பற்றிக்கொண்டான். இதற்குள் கிணற்றின் சேந்துருளை மரத்தை வெட்டிச் சாய்த்திருந்தார்கள். காரியம் நினைத்ததற்கும் மாறாக மீறிப் போனதையுணர்ந்த சோமனூர்க் கவுண்டர் என்ன செய்வ தென்று தெரியாமல் உடல்களின் மோதலில் சிக்குண்டு தவித்தார். அய்யாவும் ராமசாமியும் அவரது தோளைப் பற்றியிழுத்து கோயில் திண்ணையில் இருத்திக் கெஞ்சினார்கள். "நிறுத்தச் சொல்லுங்க. யாருக்கும் எதுவும் பெரிசா ஆயிரப்போகுது.'' அவரது ஆத்திரம் முற்றிலும் தணிந்து விட்டிருந்தது. திண்ணை மீது சட்டென்று ஏறியவர் "நிறுத்துங்கப்பா” என்று உரத்துக் குரல் கொடுத்தார்.
- நாவலிலிருந்து
No product review yet. Be the first to review this product.