ஜி.எஸ்.எஸ். மற்றும் அருண் சரண்யா ஆகிய பெயர்களில் பிரபலமான நூலாசிரியரின் முழுப் பெயர் ஜி.எஸ்.சுப்ரமணியன். M.A.,M.B.A.,PGPDM,BGL,CAIIB ஆகிய கல்வித் தகுதிகள் கொண்டவர். வங்கியொன்றில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.அனைத்து முன்னணி தமிழ் இதழ்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இவரது கட்டுரைகளும்,ஆங்கில இதழ்களில் இவரது சுமார் நூறு படைப்புகளும் வெளியாகியுள்ளன.
அருண் சரண்யா என்ற புனைப்பெயரில் இவர் எழுதிப் பிரசுரமான சுமார் 200 சிறுகதைகள் 12 பரிசு பெற்றவை.
இவர் எழுதிய ஐம்பதுக்கும் அதிகமான புத்தகங்கள் வெளியாகி உள்ளன.
பிரபல க்விஸ்மாஸ்டர்.தொலைக்காட்சியில் பல வினாடிவினா நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.
பல முன்னனி நிறுவனங்களின் அதிகாரிகளும்,ஊழியர்களும் மனித வளப் பயிற்சி மற்றும் ஆங்கில மொழிப் பயிற்சி அளித்து வருகிறது.