ஆங்கிலம் அறிவோம்
வாசகர் ஒருவர் பல வாக்கியங்களை அனுப்பி, அவை ஒவ்வொன்றிலும் ஒரு வார்த்தையை அடிக்கோடிட்டு அதற்கான அர்த்தத்தை விளக்கக் கோரியிருக்கிறார். அவற்றில் ஒன்றான ‘Supporter of the Palestinian cause’ என்பதன் கடைசி வார்த்தையில் வாசகருக்குக் குழப்பம்.
வாசகரின் குழப்பத்திற்குக் காரணம் cause என்பதன் பொதுவான பொருளில் Palestinian cause என்பது பயன்படுத்தப்படவில்லையே என்பதாக இருக்க வேண்டும்.