மனிதன் படைத்தவைதாம் தெய்வங்கள். அவன் கற்பனையும் செயலூக்கமும் விரிய நாகரீகங்கள் வளர்ந்தன. கூடவே தெய்வங்களும். உலகளந்தனசில. அங்கிங்கெனாதபடி எங்கும்நிறைந்தனசில. அவையும் பிரம்மத்தில் அடங்கின. தத்துவங்கள் துணைபோயின. பாடல்கள் விதந் தோதின. செவ்வியல் கதைகள் துதித்தன. அவற்றின் நாமத்தால் மதங்கள் உருவாயின. பூசகர்கள்... சமூக அடுக்குகள்... சாதிகள்... பாகுபாடுகள்... அடக்குமுறைகள்... இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் இப்பெருநெறி வழிபாடு இந்தியப் பெருநிலத்தில் மேலடுக்கிலேயே நிலவுகிறது.
உழைத்து வாழும் எல்லாச் சாதிசனங்களுக்கும் மூதாதையரே சாமிகள். வீட்டையும் காட்டையும் ஊரையும் காவல் காக்கின்றனர். தம் மக்களோடு வாழ்கின்றனர். உதிரப்பலியும் பொங்கலும் பூசையும் ஏற்று குறிசொல்கின்றனர்; வழிநடத்துகின்றனர்.
கண்மணி குணசேகரன் இந்த சாமிகளின் கதைகளையே இந்நூலில் சொல்கிறார்: அவர்கள் மனிதர்களாகவே நடிக்கின்றனர்.
No product review yet. Be the first to review this product.