இந்தப் புத்தகம் (Orange Book) பகவான் ஸ்ரீ ரஜனீஷ் அவர்களின் பல வருடங்களாக நிகழ்த்திய, காலைநேர பிரசங்கங்களிலிருந்தும், மாலை நேரத்து தரிசன உரையாடல்களிலிருந்தும், தியானத்தைப் பற்றிச் சொன்ன வழிமுறைகளை, கருத்துகளை, அவரது பல வெளியீடுகளிலிருந்தும் தொகுத்த ஒரு முத்துக்குவியல்.
அவருடைய சில யோக முறைகள், உதாரணமாக விபாசனா, நாதபிரம்மா, சுழலுதல் (WHIRLING) போன்றவைகள், பல காலம், பல தலைமுறைகளாக, தியானம் செய்பவர்கள் அறிந்திராத ஓர் புதுமையான அணுகுமுறை. டைனமிக் (Dynamic), குண்டலினி, கௌரிசங்கர் போன்ற யோக முறைகள், பழங்காலத்து அரிய முறைகளோடு தற்காலத்து புதிய முறை தத்துவக் கொள்கைகளையும் சேர்த்து அமைக்கப்பட்டதாகும். இவைகள், பகவான் ஸ்ரீ ரஜனீஷ் அவர்களால், இக்கால மனித சமுதாயத்திற்கு ஏற்ப, கருணை கூர்ந்து அளிக்கப் பட்ட பொக்கிஷமாகும். இவைகள் அனைத்தும், நாம், இங்கே இப்பொழுதே" அடைந்து, நம்மை நாமே முழுவதுமாக அறிந்துகொள்ளும் முயற்சியற்ற தன்மையை, பரிபூரணமாக்க மிகவும் உதவும். ஆம். முயற்சியற்ற தன்மையைத்தான்.
No product review yet. Be the first to review this product.