கிருஷ்ணமூர்த்தி போதனைகளுக்கான சிறந்த அறிமுகமாக, அவருடைய நூல்கள், ஒலிநாடாக்கள் மற்றும் ஒளிப்பேழைகள் விளங்குகின்றன. அவற்றிற்கு நிகராக, போதனைகளுக்கு விளக்கம் அளிப்பவர்களும், மதிப்பீட்டாளர்களும் எழுதியவை இருப்பதில்லை. இந்தக் கண்ணோட்டத்திலேயே, கிருஷ்ணமூர்த்தி போதனை களை அறிமுகப்படுத்தும்வண்ணம், அவருடைய சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், கடிதங்கள், நினைவு குறிப்பேடுகள், கையெழுத்துப் பிரதிகள் போன்றவற்றை தொகுத்து, இந்த அறிமுக நூலை வெளியிட்டுள்ளோம்.
மனிதன், தன் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அப்பிரச்சினைகளை புதிய முறையில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அணுகும்விதம் மற்றும் வாழ்வைப் பற்றியும், புனிதத்தைப் பற்றியும் அவர் கொண்டிருந்த காலவரம்பற்ற தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
No product review yet. Be the first to review this product.