ராமன் வனவாசம் போகையில் எந்த வழியாகப் போயிருப்பான்? வால்மீகி ராமாயணம் நமக்கு ஓரளவு சரியான இட வர்ணனையைத் தருகிறது. ஆனால் இன்றைய வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு ராமன் சென்ற பாதை எது என்பதில் உறுதியும் ஒருமித்த கருத்தும் இல்லை.
வங்க மொழி எழுத்தாளரான சீர்ஷேந்து முகோபாத்யாய், ராமாயணத்தில் விவரித்துள்ள பாதையை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இறங்கினார். அந்த அனுபவங்களை உயிரோட்டத்தோடு இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். ராமாயணம் தொடர்பான விவாதங்களும் சமகால இந்தியாவின் சூழல் குறித்த சித்திரங்களும் ஊடாடும் இந்த நூல் மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. தி.அ. ஸ்ரீனிவாஸனின் சரளமான தமிழ் நடை புராண காலத்திற்கும் சமகாலத்திற்கும் இடையிலான பயணத்தை வாசகருக்கு நெருக்கமாகக் கொண்டுவந்திருக்கிறது.